» சினிமா » செய்திகள்

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு: பத்ம பூஷன் விருதுபெற்ற மம்மூட்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

திங்கள் 26, ஜனவரி 2026 10:09:32 AM (IST)



பத்ம பூஷன் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் தர்மேந்திரா, மம்மூட்டி, நடிகர் மாதவனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷனும், மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், மாதவனுக்கு பத்மஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனக் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory