» சினிமா » செய்திகள்

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!

வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

ஜெயிலர் 2 படத்திற்கு பின், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் 'கூலி' திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் இதை ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார். லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் தயார் ஆகவில்லை. ஆனதும் நடிப்பேன் என்றார்". இதன்மூலம் இந்த படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது.

இதற்கிடையே இமயமலை சென்று திரும்பியுள்ள ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகாததால் இந்த படத்துக்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக கதைகள் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. 'அருணாச்சலம்' படத்துக்குப் பிறகு ரஜினி - சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் இந்த படத்தை முடிக்க ரஜினி திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory