» சினிமா » செய்திகள்

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!

வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)



டீசல், டியூட், பைசன்" படங்களை ஒப்பிட வேண்டாம். இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது என்று சிம்பு பதிவிட்டுள்ளார்.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் முதல் முறையாக இளம் நடிகர்களின் படங்கள் மட்டுமே இந்த வருடம் வெளியாகிறது. இப்படங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அன்புள்ள ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது. டீசல் , டியூட் மற்றும் பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுப்பதை நிறுத்திவிட்டு, நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களைக் கொண்டாடத் தொடங்குவோம். 

உள்ளே நுழைந்தவர்களை, உள்ளே நுழையக் காத்திருப்பவர்களை ஆதரிப்போம். ஒன்றாக, இந்த சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்.அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். இனிய தீபாவளி வாழ்த்துகள்". என்று பதிவிட்டுளளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory