» சினிமா » செய்திகள்
36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்
சனி 2, ஆகஸ்ட் 2025 12:40:34 PM (IST)

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினியை வைத்து இயக்கியுள்ள ‘கூலி' திரைப்படம், வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு சென்சார் அமைப்பு ‘ஏ' சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
ரஜினிகாந்த் படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் குடும்பமாக வந்து பார்ப்பார்கள். ஆனால் இப்போது ‘கூலி' படத்திற்கு ‘ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பது, தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றாலும், ‘கூலி' படத்தில் கூடுதல் வன்முறை காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல இடங்களில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்த ரஜினியின் ‘ஜெயிலர்' படத்திற்குக் கூட ‘யு/ஏ' சான்றிதழ்தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ‘கூலி' படத்திற்கு ‘ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பது, அதில் எவ்வளவு அதிகமான வன்முறை காட்சிகள் இருக்கும் என்பதை நம்மிடமே யூகிக்க விட்டதுபோல் இருக்கிறது.
‘புதுக்கவிதை', ‘ரங்கா', ‘மூன்று முகம்', ‘நெற்றிக்கண்', ‘நான் சிவப்பு மனிதன்' என்று ரஜினிகாந்த் 80-களில் நடித்த பல படங்கள் ‘ஏ' சான்றிதழுடன் வெளிவந்துள்ளன. 1989-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவா' திரைப்படம்தான், ரஜினிகாந்த் படத்தில் ‘ஏ' சான்றிதழ் பெற்றிருந்த கடைசி படமாக இருந்தது. அந்த வகையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் படம் ‘ஏ' சான்றிதழைப் பெற்றிருப்பது திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)

