» சினிமா » செய்திகள்
பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டீசர் தேதி மாற்றம்..!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:21:05 PM (IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படத்தின் டீசர் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) படத்தை இயக்கியுள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் செப்.1 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும்,டீசர் ஆக.2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஆக.2) வெளியாகவிருப்பதால் எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதியில் மாற்றப்பட்டதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்து படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், "தலைவர் தரிசனம் கூலி டிரைலர், இசை வெளியீட்டுக்குப் பிறகு எல்ஐகே படத்தின் டீசர் வெளியீட்டு எப்போது என்ற புதிய தேதி அறிவிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ்
வியாழன் 8, ஜனவரி 2026 4:11:15 PM (IST)

