» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிஎஸ்கே-வின் ஹால் ஆஃப் பேம்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் கௌரவிப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 12:21:52 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள 'ஹால் ஆஃப் பேம்' கௌரவப் பட்டியலில், முன்னாள் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்த விழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பங்கேற்ற காட்சிப் போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், டுவைன் பிராவோ, பார்த்திவ் படேல், ஹர்பஜன் சிங், எல். பாலாஜி, முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். மூத்த வீரர் எம்.எஸ். தோனி மற்றும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முன்னாள் வீரர்களை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சிஎஸ்கே அணி பலமுறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த அதிரடி மன்னன் மேத்யூ ஹெய்டன் மற்றும் 'சின்னத் தல' சுரேஷ் ரெய்னா ஆகிய இருவருக்கும் 'ஹால் ஆஃப் பேம்' அங்கீகாரம் வழங்கப்பட்டது. சிஎஸ்கே வரலாற்றில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த கௌரவப் பட்டியலில் இடம்பெறும் முதல் வீரர்கள் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)


