» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் பேட்டிங் வீழ்ச்சி: டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

வெள்ளி 10, ஜூலை 2026 4:31:49 PM (IST)

IndiaBeaten.jpg

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாகக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 49 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரைத் தொடர்ந்து ஷிவம் துபே 22 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இவருடன் ஜோடியாக விளையாடிய பில் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்துப் பங்களிப்பு செய்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் ஹாரி ப்ரூக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தன்வசப்படுத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஜூலை 11 அன்று நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory