» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை நட்சத்திர அணியில் ஆஸி ஆதிக்கம்: இந்தியாவிலிருந்து தேர்வான ஸ்ரீ சரணி!

செவ்வாய் 7, ஜூலை 2026 11:26:31 AM (IST)

ICC11List.jpg

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய வீராங்கனைகளை உள்ளடக்கிய சிறந்த லெவன் (நட்சத்திர அணி) பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி அறிவித்துள்ள இந்த நட்சத்திர அணியில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி, ஆல்-ரவுண்டர்களான எலிஸ் பெர்ரி, ஆஷ் கார்ட்னர் மற்றும் அந்த அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் ஆகியோர் சிறந்த லெவனில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி மட்டுமே இந்த ஐசிசி சிறந்த லெவன் அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டானி வியாட் மற்றும் அந்த அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோரும் இந்த நட்சத்திர அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் மரிசானே காப், அயர்லாந்தின் ஆல்-ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், இலங்கையின் நிலக்சிகா சில்வா மற்றும் பாகிஸ்தானின் பாத்திமா சானா ஆகியோரும் இந்த அணியில் விளையாடத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன், ஸ்காட்லாந்தின் டார்சி கார்ட்டர் இந்த சிறந்த லெவன் அணியின் 12-வது வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory