» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: காலிறுதிக்கு முன்னேறிய 8 பலத்த அணிகள்; சொதப்பிய தொடர் நடத்தும் நாடுகள்!

புதன் 8, ஜூலை 2026 12:30:43 PM (IST)

FifaQuali8.jpg

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் 48 அணிகளின் பங்கேற்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுகள் நிறைவடைந்து, காலிறுதிக்கு முன்னேறியுள்ள 8 சிறந்த அணிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

தொடர் நடத்தும் நாடுகளின் ஏமாற்றம்:

குரூப் சுற்றுகளின் முடிவில் தகுதி பெற்ற அணிகளுக்கு இடையே 'ரவுண்ட் ஆஃப் 32' மற்றும் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. இந்த நாக்-அவுட் சுற்றுகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா, பிரேசில், போர்ச்சுகல், கொலம்பியா போன்ற முன்னணி அணிகள் தொடரிலிருந்து வெளியேறின. குறிப்பாக, இத்தொடரை நடத்தும் நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று அணிகளும் காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்:

தீவிரப் போட்டிகளுக்குப் பிறகு பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் அதிகாரப்பூர்வமாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

காலிறுதி ஆட்டங்களின் கால அட்டவணை 

பிரான்ஸ் vs மொராக்கோ - ஜூலை 10 - அதிகாலை 1.30

 ஸ்பெயின் vs பெல்ஜியம் - ஜூலை 11 - அதிகாலை 12.30

நார்வே vs இங்கிலாந்து - ஜூலை 12 - அதிகாலை 2.30

அர்ஜெண்டினா vs சுவிட்சர்லாந்து - ஜூலை 12 - காலை 6.30


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory