» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025 தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் ‘ஏ’-வில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட்டும் +4.793 என உள்ளது.
குரூப் பிரிவில் ‘டாப் 2’ இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் குரூப் சுற்றில் 2 ஆட்டங்களில் ஓமன் அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இப்போது குரூப் ‘ஏ’-வில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த இரு அணிகளும் வரும் 17-ம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. அதில் வெற்றி பெறுகின்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அடுத்த போட்டியில் ஓமன் உடன் வரும் 19-ம் தேதி விளையாடுகிறது. 20-ம் தேதி முதல் ‘சூப்பர் 4’ சுற்று தொடங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுவ்ராஜ் சம்ரா சதம் வீண்: கனடா அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:38:33 PM (IST)

நிசாங்கா அபார சதம்: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை; ஆஸிக்கு சிக்கல்!!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:50:24 AM (IST)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:25:25 AM (IST)

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கும்ப்ளே - டிராவிட் பெயர்களில் கேலரிகள்
சனி 14, பிப்ரவரி 2026 3:52:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி: மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பு?
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:56:31 PM (IST)

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:47:21 PM (IST)

