» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மிக இளம் வயதில் சதம்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:06:34 AM (IST)



ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணியின் 14வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி  படைத்துள்ளார் 

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. 

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரியான் பராக் தம் பங்கிற்கு அதிரடியாக 32 ரன்கள் சேர்க்க அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. அதுமட்டுமல்லாது, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார். இந்தநிலையில், 14 வயதே நிரம்பியுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory