» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை : பும்ரா பெருந்தன்மை!!
திங்கள் 23, ஜூன் 2025 4:59:27 PM (IST)

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விட்டுவிடுவதில்லை. அவர்கள் அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்வர்" என்று பும்ரா கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர்.
இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கில் (8 ரன்கள்) ஆட்டமிழந்தார். தற்போது ராகுல் - பண்ட் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சில் மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்ச், ஜடேஜா ஒரு கேட்ச் என மொத்தம் 4 கேட்சுகள் தவறவிடப்பட்டன. இருப்பினும் பும்ரா அதற்கு எந்தவித ரியாக்சனும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தனது பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பும்ரா, "கேட்சுகளை தவறவிட்ட அந்த நொடி, மிகவும் மனமுடைந்துவிட்டேன். ஆனால் அதைப் பற்றி நினைத்து அழுது கொண்டே இருக்க முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதிதான். களத்தில் நிறைய புதிய வீரர்கள் இருந்தனர்.
யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விட்டுவிடுவதில்லை. அவர்களிடம் என்னுடைய எமோஷனை காண்பித்து, அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. அவர்கள் அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்வர்" என்று பெருந்தன்மையாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
