» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர்: ஆண்டர்சன் - தெண்டுல்கர் கோப்பை அறிமுகம்
வியாழன் 19, ஜூன் 2025 8:24:37 AM (IST)

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு ‘பட்டோடி’ பெயரில் மெடல் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நாளை தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனான 'பட்டோடி' பெயரில் கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
இதனை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு பி.சி.சி.ஐ.-யும் ஒப்புக்கொண்டது. அதன்படி இனி வரும் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' என்ற பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு 'பட்டோடி' பெயரில் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இதற்கு சுனில் கவாஸ்கர் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் லீட்சில் நடைபெற்ற கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் ஒன்றாக இணைந்து கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!
புதன் 26, நவம்பர் 2025 11:53:24 AM (IST)

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)


.gif)