» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டிரன்ட் பவுல்ட், ரோகித் சர்மா அசத்தல் : ஐதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:46:57 AM (IST)

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத், மும்பை அணிகள் மோதின. மும்பை 'லெவன்' அணியில் அஷ்வனி குமாருக்கு பதிலாக விக்னேஷ் தேர்வானார். ஐதராபாத் 'லெவன்' அணியில் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷான் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் குமார் ரெட்டி (2) ஏமாற்றினர். ஐதராபாத் அணி 4.1 ஓவரில், 13 ரன்னுக்கு, 4 விக்கெட்டை இழந்து திணறியது. அனிகேத் வர்மா (12) நிலைக்கவில்லை. விக்னேஷ் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய கிளாசன், ஹர்திக் பாண்ட்யா வீசிய 11வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கிளாசன், 34 பந்தில் அரைசதம் எட்டினார்.
பொறுப்பாக ஆடிய அபினவ் மனோகர், பாண்ட்யா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' கிளாசன் (71 ரன், 2 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் அபினவ் மனோகர் (43 ரன், 3 சிக்சர், 2 பவுண்டரி), கேப்டன் கம்மின்ஸ் (1) அவுட்டாகினர். ஐதராபாத் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. ஹர்ஷல் படேல் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரிக்கிள்டன் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் விளாச, 17 ரன் கிடைத்தன. ஈஷான் மலிங்கா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஜாக்ஸ். மறுமுனையில் அசத்திய ரோகித், உனத்கட், ஜீஷான் அன்சாரி பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது அன்சாரி பந்தில் ஜாக்ஸ் (22) அவுட்டானார்.
கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 35 பந்தில் அரைசதம் எட்டினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அன்சாரி வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ரோகித், 70 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஈஷான் மலிங்கா ஓவரில் 2 சிக்சர் விளாசிய சூர்யகுமார், அன்சாரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (40),திலக் வர்மா (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை டிரன்ட் பவுல்ட் வென்றார்.
பும்ரா 300 விக்கெட்
ஐதராபாத்தின் கிளாசனை வெளியேற்றிய மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் தனது 300வது விக்கெட்டை (238 போட்டி) பதிவு செய்தார். இந்த இலக்கை அடைந்த 5வது இந்திய பவுலரானார். ஏற்கனவே இந்தியாவின் சகால் (373 விக்கெட், 320 போட்டி), பியுஸ் சாவ்லா (319 விக்கெட், 297 போட்டி), புவனேஷ்வர் குமார் (318 விக்கெட், 302 போட்டி), அஷ்வின் (315 விக்கெட், 331 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!
சனி 3, மே 2025 4:13:27 PM (IST)

குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஹைதராபாத்!!
சனி 3, மே 2025 10:47:47 AM (IST)

தொடர்ச்சியாக 6 வெற்றிகள் : முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை
வெள்ளி 2, மே 2025 12:45:12 PM (IST)

ஸ்ரேயாஸ் அதிரடியில் சிஎஸ்கே தோல்வி : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது!
வியாழன் 1, மே 2025 11:06:05 AM (IST)

டெல்லி அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
புதன் 30, ஏப்ரல் 2025 4:56:41 PM (IST)

மிக இளம் வயதில் சதம்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:06:34 AM (IST)
