» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவாக 5ஆயிரம் ரன்கள் : கே.எல்.ராகுல் புதிய சாதனை

புதன் 23, ஏப்ரல் 2025 12:53:14 PM (IST)


ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். 

நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார்.

லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். 130 இன்னிங்ஸில் விளையாடி 5,006 ரன்கள் எடுத்துள்ளார். 40 அரை சதம், 4 சதம் விளாசி உள்ளார். பேட்டிங் சராசரி 46.35. ஸ்ட்ரைக் ரேட் 135. 425 ஃபோர்கள், 203 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.

குறைந்த இன்னிங்ஸில் 5,000 ரன்கள் எட்டிய பேட்ஸ்மேன்கள் @ ஐபிஎல்

கே.எல்.ராகுல் - 130 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
ஷிகர் தவாண் - 168 இன்னிங்ஸ்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory