» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை: அம்பாதி ராயுடு கருத்து

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:35:00 PM (IST)

நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு கூறியுள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.

இந்த வரிசையில் இப்போது மற்றொரு முன்னாள் சிஎஸ்கே வீரர் ராயுடு இணைந்துள்ளார். "மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் சேர்க்கவே இல்லை. டி20 கிரிக்கெட் மாற்றம் கண்டுள்ளது. இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் கூட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அணிகள் ரன் சேர்க்கின்றன. சிஎஸ்கே அணி ஆட்டத்தில் அதிரடி காட்ட தவறுகிறது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. ஆனால், களத்தில் முனைப்பை வெளிப்படுத்த வேண்டும். மும்பை உடன் 190+ ரன்களை சேர்த்திருக்கலாம். மிடில் ஆர்டர் காரணமாக அதை செய்ய தவறிவிட்டது சிஎஸ்கே.

நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். அதையே தான் தோனியும் சொல்லி உள்ளார். அவர்களது பார்வை அடுத்த சீசன் நோக்கி உள்ளது. அணியின் கவனம் இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அச்சமற்று கிரிக்கெட் ஆடுவதிலும்தான் இருக்க வேண்டும். ஆட்டத்தை நேர்மறை எண்ணத்துடன் அணுக வேண்டும். இளம் வீரர் ஆயஷ் மாத்ரேவுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory