» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கடும் கண்டனம்!

சனி 2, மே 2026 3:27:51 PM (IST)

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று மே 1ஆம் தேதி சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,239 ரூபாயாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஒன்றிய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை ஒரேடியாக சுமார் 1000 ரூபாய் அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு வினியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory