» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் வேளாங்கண்ணி வருகை திடீர் ரத்து : திருப்பலி தாமதம், தொண்டர்கள் ஏமாற்றம்!

சனி 2, மே 2026 11:58:31 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருவதாக இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரைக்காண அதிகாலை முதல் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுள்ள த.வெ.க., பெரும் வெற்றியைப் பெற வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜய் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்தவர், அதன் தொடர்ச்சியாகச் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (சனிக்கிழமை) வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு விஜய் நேரில் வந்து வழிபாடு நடத்துவார் எனத் தகவல்கள் வெளியாகின. அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் வேளாங்கண்ணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டதால், நாகை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. தொண்டர்கள் அதிகாலை 3 மணி முதலே பேராலய வளாகத்தில் குவியத் தொடங்கினர்.

நேரம் கடந்தும் விஜய் வராததால் ஏமாற்றமடைந்த தொண்டர்கள், பேராலய வளாகத்தில் 'டி.வி.கே., டி.வி.கே.' என முழக்கமிட்டனர். இதனால் அங்கு நடைபெறவிருந்த திருப்பலி சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இறுதியாக விஜய்யின் வருகை ரத்து செய்யப்பட்டதை அறிந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

வாக்கு எண்ணிக்கை ஆலோசனை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory