» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று, சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. ‘அரகரா... சிவசிவா...’ முழக்கங்களுக்கு இடையே லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.
கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், பட்டாபிஷேகம், திக்கு விஜயம் மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுந்தரேசுவரர் - பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணிக்கு சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
தேரோட்டத்தின் முன்னே அலங்கரிக்கப்பட்ட யானை கம்பீரமாகச் செல்ல, அதைத் தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான் மற்றும் நாயன்மார்கள் சப்பரங்களில் வலம் வந்தனர். மாசி வீதிகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சங்கு முழங்கியபடியும் இசை வாத்தியங்கள் முழங்கியபடியும் பக்திப் பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் விழா நிறைவடையும் தருவாயில், வைணவத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இன்று மாலை அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுகிறார். நாளை (ஏப்ரல் 30) மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் ‘எதிர்சேவை’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (மே 1) விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளதால், மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாசி வீதிகள் மற்றும் வைகை ஆற்றங்கரைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)

