» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. நகருக்குள் புகுந்த வெள்ளநீர் பக்கிள் ஓடை வழியாகவே வெளியேற்றப்பட்டது. இருப்பினும், ஓடையின் கொள்ளளவு குறைவாக இருந்ததால் பல இடங்களில் நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை எதிர்காலத் திட்டமாக எடுத்துக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், ஓடையின் நீரை வெளியேற்றும் திறனை அதிகரிக்க முடிவு செய்தது.
அதன்படி, இந்திய உணவுக் கழக கிடங்கு முதல் திரேஸ்புரம் கடற்கரை பகுதி வரையிலான சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 5 முதல் 6 மீட்டர் வரை ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போதிலும், அத்தியாவசியப் பணி என்பதால் இந்தப் பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன.
நேற்று இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேரில் ஆய்வு செய்தார். ஓடையின் குறுக்கே உள்ள அடைப்புகளை அகற்றுவது மற்றும் கரைகளை பலப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)