» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்புக் காலம் பெரும்பாலான பகுதிகளில் 5 நாட்களுக்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPC) ஆகிய நிறுவனங்களின் எரிபொருள் விற்பனை நிலையங்களில் (பெட்ரோல் பங்க்குகள்), பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே, பொதுமக்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் விநியோக முனையங்கள், கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை அனைத்து விநியோகச் சங்கிலிகளும் தடையின்றி இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் எரிபொருள் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.

அதேபோல், தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் தொடர் முயற்சி மற்றும் தமிழக அரசின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக, பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.    "விநியோக கால அளவை மேலும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் 'ஆட்டோ எல்.பி.ஜி'யும் எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory