» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சென்னை மற்றும் நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு (MEMU) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தச் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஏப்ரல் 25) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory