» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)



சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுடன் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுடன் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, தேர்தல் நடைபெற்ற விதம், வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் தொகுதிகளின் தற்போதைய சூழல் குறித்து வேட்பாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வேட்பாளர்கள் மற்றும் குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆர்வம் காரணமாக, வாக்குப்பதிவு 85 சதவீதத்தைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நான்கு முனைப்போட்டி நிலவும் இந்தச் சூழலில், வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory