» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக தேர்தல் அரசியலில் புதிய விடியல்: 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் கருத்து!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:04:18 PM (IST)
2026 சட்டமன்றத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுவதாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.தேர்தல் வரலாற்றில் 85% வாக்குப்பதிவு என்பது இதுவரை காணாத ஒன்று என்றும், இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சிகரமான நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்பது குறிப்பிட்ட சிலருக்கானது அல்லது அனுபவசாலிகளுக்கானது மட்டுமே என்ற பிம்பத்தை பொதுமக்கள் உடைத்து எறிந்துவிட்டனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் அரசியல் பேசத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய மாற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளில் குடும்பமாக வந்து வாக்களித்தவர்களுக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஏளனம் பேசியவர்களுக்குத் தனது செயல்களால் பதிலடி கொடுத்த கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தமக்கு உறுதுணையாக இருந்த கழகத் தோழர்களை அவர் பாராட்டியுள்ளார். "வெற்றி நிச்சயம்" என்ற வாசகத்துடன், தமிழக அரசியலில் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், நல்லதே நடக்கும் என்றும் அவர் உறுதியுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது சிரம் தாழ்ந்த நன்றியறிதலை அவர் காணிக்கையாக்கியுள்ளார். இந்தத் தேர்தல், தமிழக மக்களின் ஜனநாயக ஆர்வத்தையும், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:21:40 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:19:58 PM (IST)

