» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்து அண்மையில் தான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் இது குறித்துக் கூறியதாவது: "என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை; அவ்வாறு பேசியதும் இல்லை. அண்மையில் த்ரிஷா குறித்துப் பேசியது அன்றைக்குத் தவறி வந்த ஒரு வார்த்தை. இது குறித்துக் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் என்னிடம் பேசினார்கள். உண்மையில் எனது பேச்சால் யாரேனும் வருத்தப்பட்டிருந்தால், அதற்கு என்னுடைய மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் அறிக்கை
முன்னதாக, நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:
மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று த்ரிஷா எதிர்பார்க்கவில்லை.
த்ரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் இணையவில்லை; அவ்வாறு இணையும் விருப்பமும் அவருக்கு இல்லை.
கடந்த காலங்களைப் போலவே அரசியலில் எப்போதும் அவர் நடுநிலையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. இதற்குத் திரைத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:09:32 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

