» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சனி 3, ஜனவரி 2026 12:25:43 PM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டத்தினை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் இதுவரை 3,967 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது வடமாநிலங்களில் மட்டுமே இருந்த பெருந்திட்ட வரைவு என்ற திட்டத்தினை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட 17 கோவில்களில் நடத்தி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். 400 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் பூட்டி கிடந்த ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது கருஉருமாரி தெப்பம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில் வெள்ளி தேர் செய்வதற்கு உபயதாரர் இல்லாத நிலை இருந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இருந்து உபயதாரர்கள் வரவழைக்கப்பட்டு தேர் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சொல்வதை செய்யும் அரசு என்பதற்கு நெல்லையப்பர் கோவில் வெள்ளி தேர் உலாவே சாட்சியாகும். இவ்வளவு திட்டங்களை செய்து வரும் திராவிட மாடல் அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு என பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட பிம்பம் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
திராவிட மாடல் அரசு மக்களை மட்டும் அல்ல கடவுளையும் லிப்டிங் செய்யும் அரசாக உள்ளது. சாலையை விட பள்ளத்தில் இருந்த 25 கோவில்கள் கண்டறியப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்துடன் 14 கோயில்கள் லிப்டிங் செய்யப்பட்டுள்ளது 15 வது கோயில் லிப்டிங் செய்யும் பணி நடந்து வருகிறது.அந்த கோவில் கோபுரத்தையும் லிப்டிங் செய்யக்கூடிய பணி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லையப்பர் கோவிலுக்கு யானை கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு அதில் வெற்றி பெற்று யானை நெல்லையப்பர் கோவிலுக்கு விரைவில் கொண்டு வரப்படும். நெல்லைப்பர் கோவிலுக்கு யானை வழங்குவதற்கு உத்தரக்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபயதாரர் தயாராக உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரோட்டத்தில் விரும்ப தகாத சம்பவம் ஒன்று நடைபெற்றது அராஜகம் அத்துமீறலுக்கு பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை. கோவில் வளாகத்திற்குள் விரும்பத் தகாத முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அவ்வாறு முழக்கம் எழுப்பியவர்கள் ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 494 கோவில்களுக்கு மூன்று கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது திராவிட மாடல் அரசு ஆண்டுக்கு 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 300 கோவில்களில் 157 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகம் என்பது அறத்தை உணர்த்துவது கோவில் என்பது அமைதிக்கான இடம் அங்கு மனிதநேயத்தை மட்டுமே வளர்க்க வேண்டுமே கலையை வளருங்கள் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா துணை மேயர் கே.ஆர்.ராஜூ,, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.மனோஜ் பாண்டியன், முக்கிய பிரமுகர் கிரகாம்பெல் இந்து சமய அறநிலைய த்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு கூ.பொ. அ.ஜான்சிராணி, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், கிறித்துவ தேவாலயங்களில் உபதேசியார்கள் பணியளார்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், அறங்காவலர் குழுத் தலைவர் செல்லலையா, நெல்லை மண்டல குழுத்தலைவர் மகேஸ்வரி, செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; விஜய் 2-ம் இடம்: லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள்!
சனி 3, ஜனவரி 2026 3:56:49 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு விவரம்!!
சனி 3, ஜனவரி 2026 3:25:18 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி
சனி 3, ஜனவரி 2026 3:11:17 PM (IST)

