» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி

சனி 3, ஜனவரி 2026 3:11:17 PM (IST)

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகள் பிரச்சினைக்கு முதல்வர் ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்வு கண்டுள்ளார் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நன்றி தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய புதிய திட்டமான "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 

முதல்வரின் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "23 ஆண்டுகளாக தொடர்ந்து போராடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு இந்த இந்த சிறப்பான அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

2003 ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கிடையாது என அறிவித்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு முதல் பாஜக ஒன்றிய அரசும் ஓய்வூதியம் கிடையாது என அறிவித்தது இதனால் நாடு முழுவதும் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் 23 ஆண்டுகள் பிரச்சினைக்கு இன்று உண்மையிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்கது. எடப்பாடி முதலமைச்சராக இருந்த காலத்தில் இதே கோரிக்கை வற்புறுத்தி ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திய போது அதிமுக அரசு கடுமையான அடக்குமுறையை ஏவி அவர்களை கைது செய்வது போராட்டத்தை தடை செய்தது. 

துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை போன்ற கொடூரமான அடக்குமுறைகளை  எடப்பாடி ஆட்சி காலத்தில் மேற்கொண்டனர். திராவிட முன்னேற்ற கழகம் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இந்த ஓய்வூதியம் குறித்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது அதன்படி அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள இந்த ஓய்வூதியத் திட்டம் இனி எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory