» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)
தமிழகத்தில் வருகிற 9-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 7-ஆம் தேதி வரைகடலில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் 7-ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்சியில் பொங்கல் விழா: தமிழர் பாரம்பரிய உடையில் அமித் ஷா பங்கேற்பு!
திங்கள் 5, ஜனவரி 2026 5:11:12 PM (IST)

தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 4:18:09 PM (IST)

அமமுக கைகாட்டுபவர்கள்தான் முதல்வராக வர முடியும் : டிடிவி தினகரன் பேட்டி
திங்கள் 5, ஜனவரி 2026 3:52:29 PM (IST)

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
திங்கள் 5, ஜனவரி 2026 3:30:46 PM (IST)

இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால் திமுகதான் : அமித் ஷா பேச்சு!
திங்கள் 5, ஜனவரி 2026 11:30:39 AM (IST)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 9.14 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 10:57:45 AM (IST)

