» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 10:42:24 AM (IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06011) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06054) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06053) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி வந்துசேரும்.
- திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06156) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06055) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
- திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06158) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06057) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
- கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06034) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06033) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூர் வந்துசேரும்.
- போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06024) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) போத்தனூரில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06023) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வந்துசேரும்.
- திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06070) வருகிற 08 ம் தேதி அன்று (வியாழக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06069) வருகிற 09 ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை திருநெல்வேலி வந்து சேரும்.
- ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06025) வருகிற 13 ம் தேதி அன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06026) வருகிற 14ம் தேதி அன்று (புதன்கிழமை) செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு போத்தனூர் புறப்பட்டும்.
- ராமேசுவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06106) வருகிற 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06105) வருகிற 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம்ன் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
- மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06125) வருகிற 13 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மங்களூரில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06105) வருகிற 14 ம் தேதி (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 4.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; விஜய் 2-ம் இடம்: லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள்!
சனி 3, ஜனவரி 2026 3:56:49 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு விவரம்!!
சனி 3, ஜனவரி 2026 3:25:18 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி
சனி 3, ஜனவரி 2026 3:11:17 PM (IST)

