» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு : பெண் பயணி காயம்!

சனி 3, ஜனவரி 2026 8:22:47 AM (IST)



ஆரல்வாய்மொழி அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் திடீரென்று சரமாரியாக கற்களை வீசியதில் பெண் பயணி காயம் அடைந்தார். 

நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை வழியாக தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ரயில் நேற்று ஆரல்வாய்மொழி அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் திடீரென்று ரயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின.

ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி என்ற பயணியின் மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன. இதில் அவருக்கு தலை மற்றும் முகம் பகுதியில் காயம் ஏற்பட்டது. ரயில் நெல்லை வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று ரயில் மீது கற்களை வீசிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory