» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழில்நுட்பக் கோளாறால் சுரங்கப் பாதையில் நின்ற மெட்ரோ ரயில்: பயணிகள் மீட்பு!!

புதன் 3, டிசம்பர் 2025 11:10:24 AM (IST)



தொழில்​நுட்​பக் கோளாறால், சென்னை சென்ட்​ரல் - உயர்​நீ​தி​மன்​றம் இடையே சுரங்​கப் பாதை​யில் நடு​வழி​யில் மெட்ரோ ரயில் நேற்று அதி​காலை திடீரென நின்​றது. இதனால், தவித்த பயணி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

சென்​னை​யில் இரண்டு வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்​கப்​படு​கின்​றன. விரை​வான, பாது​காப்​பான, சொகு​சான பயணத்​துக்கு ஏற்​ற​தாக இருப்​ப​தால், மெட்ரோ ரயில்​களில் பயணிப்​போர் எண்​ணிக்கை உயர்​கிறது. மேலும், மழை​காலத்​தில் மெட்ரோ ரயில் மக்​களுக்கு பேருத​வி​யாக இருக்​கிறது. 

இந்​நிலை​யில், தொழில்​நுட்ப கோளாறால், சுரங்​கப்​பாதை​யில் நடு​வழி​யில் மெட்ரோ ரயில் நின்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. விமான நிலை​யத்​தில் இருந்து விம்கோ நகருக்கு நேற்று அதி​காலை மெட்ரோ ரயில் புறப்​பட்டு சென்று கொண்​டிருந்​தது. சென்ட்​ரல் - உயர்​நீ​தி​மன்​றம் இடையே சென்ற போது, திடீரென தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது. இதனால், சுரங்​கப் பாதை​யில் நடு​வழி​யில் மெட்ரோ ரயில் நின்​றது. இதனால், பயணி​கள் குழப்​பமடைந்​தனர்.

இதுத​விர, மின்​சா​ரம் தடைப்​பட்டு ரயிலுக்​குள் இருந்த மின்​விளக்​கு​களும் அணைந்​தன. இதனால், ரயி​லில் இருந்த பயணி​கள் கடும் அச்​ச​மும், பீதி​யும் அடைந்​தனர். சுரங்​கப் பாதை​யில் பயணி​கள் ரயி​லில் சிக்கி 10 நிமிடத்​துக்கு மேல் இருந்த நிலை​யில், மெட்ரோ ரயில் நிர்​வாகத்​தின் அறி​விப்பு வெளி​யானது. அதில், அரு​கில் உள்ள நீதி​மன்​றம் நிலை​யத்​துக்கு பயணி​கள் செல்​லு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டது.

இதையடுத்​து, ரயி​லில் இருந்து மீட்​கப்​பட்ட பயணி​கள் சுரங்​கப் பாதையை ஒட்​டி, நடை​பாதை வழி​யாக நடந்து சென்​றனர். 500 மீட்​டர் தூரத்​துக்கு நடந்து சென்​று, உயர்​நீ​தி​மன்ற மெட்ரோ நிலை​யத்தை அடைந்​தனர். அவசர காலத்​தில் பயணி​கள் சுரங்​கப் பாதை​யில் இருந்து வெளியே வர அமைக்​கப்​பட்ட வழி​யாக, ஒவ்​வொரு பயணியாக வரிசை​யாக சென்​றனர்.

சுரங்​கப் பாதை​யில் இருளில் சிக்​கிக் கொண்ட பயணி​கள் வெளியே வந்த பிறகு, நிம்​மதி பெரு​மூச்சு விட்​டனர். சென்னை மெட்ரோ ரயில் பயணி​கள் சுரங்​கப் பாதை​யில் சிக்​கிக் கொண்​டது இதுவே முதல் முறை​யாகும். இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில், ‘தொழில்​நுட்​பக் கோளாறால், உயர்​நீ​தி​மன்ற நிலை​யம் - சென்னை சென்ட்​ரல் நிலை​யங்​களுக்கு இடையே மெட்ரோ ரயில் நிறுத்​தப்​பட்​டது.

உடனடி​யாக பயணி​கள் வெளி​யேற்​றப்​பட்​டு, தொழில்​நுட்​பக் கோளாறு சரி செய்​யப்​பட்​டது. தொடர்ந்​து, காலை 6.20 மணி முதல் மெட்ரோ ரயில் வழக்​கம் போல இயங்​கத் தொடங்​கின” என்று தெரிவிக்​கப்​பட்​டது. மெட்ரோ ரயில் சுரங்​கப் பாதை​யில் பயணி​கள் சிக்​கிக் கொண்ட சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory