» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் வழக்கு!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:53:41 PM (IST)

பாமக தலைவராக அன்புமணி ராமதாசை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான 'மாம்பழம்' ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

ராமதாஸ் கடிதத்துக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என அறிவித்தது. இந்த கடிதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம் என்று ராமதாஸ் கூறிய நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்களது தரப்பு அளித்த அசல் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory