» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்

புதன் 3, டிசம்பர் 2025 11:04:22 AM (IST)



ஏஐ மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக போலியான வீடியோவை பரப்பி வருகின்றனர் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரில் சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்வதோடு, விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக போலியான வீடியோவை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory