» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!

புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார். 

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார். தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory