» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:12:54 PM (IST)
மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர், உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில், தாக்கல் செய்த மனுவில், மதுரையில் மெட்ரோ திட்டங்களை அமைப்பதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. இதன் காரணமாக கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவ்வாறெனில் 20 லட்சத்துக்கு அதிகமாகவே மதுரையின் மக்கள்தொகை இருக்கும்.
ஆகவே மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் அனுப்ப தமிழக திட்டமிடல் மேம்பாட்டு துறையின் தலைமைச் செயலருக்கும், மத்திய அரசு அதனை பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள்தொகை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், திட்டம் நிராகரிக்கப்படவில்லை, விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. எப்படி இந்த நிவாரணத்தை வழங்குவது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுடன் மேள தளம் முழங்க மனு கொடுக்க வந்த விவசாயி!
புதன் 26, நவம்பர் 2025 9:42:49 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!
புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!
புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ : காவல்துறையிடம் அனுமதி கோரி மனு!
புதன் 26, நவம்பர் 2025 11:28:57 AM (IST)


.gif)