» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!

புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ., பதவியை செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 63ஆக குறைந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8 முறை வென்றார்) போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்கு உரியவரான செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தின் வாக்குகளைக் கவருவதில் முக்கிய நபராக அறியப்பட்டு வருகிறார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.இதனால், அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு, தவெகவில் இணையப்போகிறீர்களா? என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''ஒரு நாள் பொறுத்திருங்கள்'' என அவர் பதில் அளித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, பதவியில் இருக்கும்போது வேறு ஒரு கட்சியில் இணையக்கூடாது என்பதால், செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் செங்கோட்டையன் வேறு கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory