» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது நடவடிக்கை : ஏர்ஹாரன்களும் பறிமுதல்!!

புதன் 26, நவம்பர் 2025 8:26:51 AM (IST)



கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த 4 மினி பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஓடும் மினி பஸ்களில் திடீர் சோதனை நடத்தினர்.

மினி பஸ்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமே ரூ.11 தான். ஆனால் 4 மினி பஸ்களில் பயணிகளிடம் ரூ.13, ரூ.14 என கூடுதலாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory