» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

தமிழக அரசின் விருத்து பெற்ற நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜமாத்தை சார்ந்த பாய் நெசவாளர் 8 பெண்களுக்கு பாய் நெசவாளர் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜமாத்தை சார்ந்த பாய் நெசவாளர் 8 பெண்களுக்கு தமிழக அரசால் விருதுகளும், காசோலையும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைத்து பெண்களுக்கும் வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா இன்று (19-11-2025 புதன் கிழமை) நடை பெற்றது.
தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருது வழங்கும் விழா 17.11.2025 மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதுகள் வழங்கினார்.
பாய் நெசவாளர்களுக்கான விருது பெற்ற மதினா பாத்திமா பிர்தெளஸ், பௌசியாள் பேகம், சரிபாள் பீவி, சுகராள் ஆகியோருக்கு 2023-2024 மாவட்ட விருது, 10 ,000 (பத்தாயிரம்) ரூபாய் காசோலை,5 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. பயன்பாடு சார்ந்த விருது 2023-2024 விருது,40,000 (நாற்பது ஆயிரம்) ரூபாய் காசோலை, 4 கிராம் தங்க பதக்கம்
மும்தாஜ் என்பவருக்கு 2024-2025 மாவட்ட விருது, 10,000 (பத்தாயிரம்) ரூபாய் காசோலை, 5 கிராம் வெள்ளி பதக்கம் மகமுதாள் பானு என்பவருக்கு 2024-2005 குழு உற்பத்தி விருது, 40,000 (நாற்பது ஆயிரம்) ரூபாய் காசோலை, 4 கிராம் தங்க பதக்கம் ஹாஜா மைதீன் பீவி, மதினா பாத்திமா பிர்தௌஸ், சுளைகாள் பானு ஆகிய பெண்களுக்கு தமிழக அரசால் விருதுகளும் காசோலைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
விருதுகள் பெற்ற அனைத்து பெண்களுக்கும் இன்று (19-11-2025 புதன்கிழமை) வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் H.முகம்மது கனி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P. நவாஸ் ஷரீப்,பாய் நெசவாளர் சங்கத்தின் கணக்காளர் பெருமாள், மற்றும் மணி SDPI இப்ராஹிம் , மற்றும் வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் பாய் நெசவாளர்கள் பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!
சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்
சனி 22, நவம்பர் 2025 10:41:22 AM (IST)

பற்களை பிடுங்கியதாக வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
சனி 22, நவம்பர் 2025 8:49:41 AM (IST)


.gif)