» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!

சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அருகே, நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே கிராங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவர் இப்பகுதி திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.  இவருக்கு சரிதா(40) என்ற மனைவியும் கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும் நவீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ராஜேந்திரன் தனது மனைவி சரிதாவுடன் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இதில் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கல்வராயன் மலை கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீசார், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சந்தேகிக்கும் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் திமுக பிரமுகர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கல்வராயன் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory