» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)



கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைககள் காப்பகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட இயக்குநர் மாரிமுத்து, குழந்தை காப்பகத்திற்கு பயில வரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்கள்.

கங்கைகொண்டானில் இயங்கி வரும் "சிப்காட் தொழிற் பூங்காவில்” உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக சிப்காட் திட்ட அ.லுவலகத்தில் சுமார் 605 சதுர அடி பரப்பளவில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள "குழந்தைகள் காப்பகம்” கட்டப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் நல்ல பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் குழந்தைகளுக்கு அன்பாகவும் பொறுமையாகவும் கல்வி கற்பித்தலோடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தும் நோக்கில் குழந்தைகளை நன்கு பராமரிக்கவும், கல்வியுடன், விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பதற்கும் சூழ்நிலை உள்ளது.

இந்நிகழ்ச்சியில், சிப்காட் அலுவலர் அழகுவேல்முருகன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சிப்காட் நிறுவன பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory