» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:03:18 PM (IST)
தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் நாங்கள் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்தெடுக்கப் போகிறோம் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

எங்கள் தரப்பு கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று கோரிக்கைகள் வைத்திருந்தோம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும், அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இது மூன்றுமே எங்களுக்கு சாதகமானது.
கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. காவல்துறை சொன்ன இடத்தில் தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அதேபோல், விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்துக்குள் தான் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.
கரூருக்கு நாங்கள் வந்தபோது, கரூர் காவல்துறை எங்களை வரவேற்றது. வழக்கத்துக்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாது, கரூரில் மட்டும் எங்களை காவல்துறை வரவேற்றது ஏன்?. எங்கள் தொண்டர்கள் மீது ஏதோ தீவிரவாதிகள் போல் போலீசார் தடியடி நடத்தினர். கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். நாங்கள் அப்பவும் கூட கரூர் எல்லையில் தான் இருந்தோம்.
நீங்கள் உள்ளே வந்தால் கலவரமாகிவிடும் என்று சொன்னதால் தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை. தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனால் நாங்கள் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்தெடுக்கப் போகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். அவர்களோடு இணைந்து போராடுவோம்.” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சீமான் கேள்வி!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:45:48 PM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:50:26 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

தூத்துக்குடியில் அக்.16ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:32:44 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)
