» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி : மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 3:13:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அ்பபோது, வல்லநாடு கீழத்தெரு கோமு மனைவி சரஸ்வதி (55) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் வந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், தனது மகன் உத்தண்டராமன், மருமகன் சிந்தாமணி முறப்பநாடு போலீசார் பொய் வழக்குப் பதிந்து குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவதாக மிரட்டியதால் தான் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். பின்னர் போலீசார் அவர் வைத்திருந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சீமான் கேள்வி!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:45:48 PM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:03:18 PM (IST)

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:50:26 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

தூத்துக்குடியில் அக்.16ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:32:44 PM (IST)
