» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

திங்கள் 13, அக்டோபர் 2025 4:50:26 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.

தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.

ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory