» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கப் பணி: பயணிகள் மகிழ்ச்சி!

வியாழன் 9, அக்டோபர் 2025 12:45:42 PM (IST)



பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் நடைமேடை அகலப்பாதைக்கு ஏற்ப உயரம், நீளம் மாற்றி அமைக்கப்பட்டு வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை - திருச்செந் தூர் இடையே ரயில் பாதை மீட்டர் பாதை யாக இருந்து வந்தது. இந்த வழித்தடம் அகல பாதை யாக மாற்றப்பட்ட நிலை யில் அதற்கு ஏற்ப இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்க ளில் நடைமேடைகள் உய ரத்தை மாற்றாததால் தாழ்வாகவே இருந்து வந்தது. இதனால் இந்த நடைமேடையில் ரயிலில் ஏறவும் இறங்கவும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் ஏறி இறங்க சிரமப்பட்ட னர்.

மேலும் பிளாட்பாரத் தின் நீளமும் குறைவாக இருந்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் போன்ற அதிகபெட்டிகள் உடைய விரைவு ரயில்களும் நிறுத்த முடியாத நிலை இருந்து வந்தது. எனவே நெல்லை திருச்செந்தூர் இடையே உள்ள ரயில் நிலையங்க ளின் நடைமேடையில் நீளம் மற்றும் உயரத்தை அகலப்பாதைக்கு ஏற்ப மாற்றவேண்டும் எனபயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நெல்லை- திருச்செந்தூர் இடையேயுள்ள 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணியானது முன்மொழியப்பட்டு, கடந்த பெப்ரவரி 17ந் தேதி காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுபோல் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையின் உயரத்தை உயர்த் துவதற்காக மண் நிரப்பி, தொடர்ந்து தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடுதல் பெட்டிகள் நிற்பதற்கு வச தியாக பிளாட்பாரத்தின் நீளமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த ரயில் நிலையத்தில் அருகே உள்ள புதர் மண்டி கிடந்த பகுதி கள் பொக்லைன் உதவியு டன் அகற்றப்பட்டு அந்த பகுதி மண் கொண்டு நிரப் பப்பட்டு புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக நெல்லை திருச்செந்தூர் வழித்தடத்தில் செல்லும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதிர்காலத்தில் செந் தூர் எக்ஸ்பிரஸ் போன்ற அதிக பெட்டி உடைய விரைவு ரயில்களும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory