» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய், சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இதில் கம்பிகள் பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவை மூலம் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் லாரி போன்ற வாகனங்கள் வரும் போது கால்வாய் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பெருமாள்புரம் பகுதியில் இதுபோன்று கம்பியில்லாமல் கட்டப்பட்ட கால்வாய் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனை 2ஆண்டுகளுக்கு மேலாகியும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற பணிகளால் மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் இப்பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு விளக்கம்
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:16:26 PM (IST)

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கடனுதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:10:31 PM (IST)

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி தென்காசி வருகை: ஏற்பாடுகள் தீவிரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:20:59 PM (IST)

நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:16:51 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)
