» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கடனுதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு

வெள்ளி 10, அக்டோபர் 2025 4:10:31 PM (IST)

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவிகள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடனுக்கான தகுதி மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராக இருக்க வேண்டும். (சாதிச்சான்றிதழ்)

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ( கிராமம்/நகர்ப்புறம் பாகுபாடின்றி) (வருமானச் சான்றிதழ்)

அ. மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (அல்லது)

ஆ. வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted Officer) சான்றிளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ்.

3. விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பி.எச்.டி முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT, GMAT, GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். (சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை/சலுகை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் அடிப்படையாகத் கொண்டதல்ல)

நிதியின் அளவு: ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.15,00,000/-க்கு உட்பட்ட பாடத்திட்டத்தின் செலவில் 85% புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15% அதாவது ரூ.2.25 இலட்சம் தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1. கடன் தொகையானது சேர்க்கைக் கட்டணம், கல்விக்கட்டணம், புத்தகங்கள், எழுது பொருட்கள், தேர்வு மற்றும் நுலகக் கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.

2. கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும் (செமஸ்டார் அல்லது அரையாண்டு அடிப்படையில்)

3. முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும்.

4. வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை.

வட்டி விகிதம்: வட்டி விகிதம் ஆண்டிற்கு 8%

கடனை மீள பெறுவதற்கான கால அவகாசம்: கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீளப் பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடனை திரும்ப செலுத்தும் காலம்: மாணவர்களிடமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 5 வருட தடைகாலம் உட்பட அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படவேண்டும்.

முன்கூட்டியே செலுத்தப்படும் கடன்: கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். அதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்படிவம் (www.tabcedco.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பிசை் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory