» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளி 10, அக்டோபர் 2025 11:16:51 AM (IST)

நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் திடியூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எலிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory