» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துகிறது : முன்னாள் அமைச்சர்கள் பேச்சு

புதன் 8, அக்டோபர் 2025 8:13:19 PM (IST)



ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். 

தூத்துக்குடியில் உப்பள தொழிலை அழித்து கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட கூடாது என்று வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மதசார்பற்ற ஜனதாதள கட்சி மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசும்போது "பல தலைமுறைகளாக இந்த உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும், துறைமுகத்திடம் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது அதனைப் பயன்படுத்த வேண்டும், திமுக அரசு நினைத்தால், கனிமொழி எம்பி நினைத்தால் உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த முடியும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிமுக துணை நிற்கும் இவர்கள் அனைவரையும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார், 

முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2013ம் ஆண்டு இந்த திட்டத்தை அவர் நிறுத்தி வைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார், ஆனால் தற்போது திமுக அரசு சிலரது சுயலாபத்திற்காக இந்த இடத்தில் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது இதனை அதிமுக கண்டிக்கிறது. இதற்கு எதிராக தொழிலாளர்கள் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். 

இதேபோல்  ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தேசிய செயலாளர் கதிர்வேல், தமிழக வெற்றி கழகம் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சி ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், அன்னலட்சுமி, உழவர் உழைப்பாளர் கட்சி ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசினர்.

நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத். ஸ்ரீராம், முருகேசன்,உப்பளத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் பொன்ராஜ், பேச்சிமுத்து,பூமயில் பரமசிவன் முனியசாமி,விவசாய சங்கம் ஜோதிமணி, வியாபாரிகள் சங்கம் அன்னசேகர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory