» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

File Photo Modi & Edapadi

25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிவாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி அவர் குஜராத் முதல்- மந்திரியாக பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை அவரது பயணம் பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தலைமைப்பதவியில் 25 ஆண்டுகாலம் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory