» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் நாளை முதல் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் ‍: தெற்கு ரயில்வே தகவல்!

புதன் 8, அக்டோபர் 2025 11:59:56 AM (IST)



நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. 

இதனிடையே வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து தற்போது கோவில்பட்டியிலும் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. 

இந்தநிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . காலை 6.05 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 6.38 முதல் 6.40 வரை நின்று செல்லும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.23 முதல் 9.25 மணி வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory